Posts

Showing posts from September, 2017

நிலம் காப்பாள் நித்யகல்யாணி

Image
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் அருள் பாலிக்கிறாள் நித்ய கல்யாணி அம்மன். செங்கோட்டை, கேரளா திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தபோது  திருவிதாங்கூர் மன்னர் குற்றாலத்திற்கு அடிக்கடி விஜயம் செய்வார்.  அவ்வாறு வந்துவிட்டு செல்லும்போது செங்கோட்டை அருகே இலத்தூரில் உள்ள  மதுநாதசுவாமியை தரிசனம் செய்துவிட்டுத் தான் செல்வார். ஒருமுறை இலத்தூருக்கு சென்று கொண்டிருக்கும்போது கானகத்தின் நடுவே உள்ள பாதையில்  மூங்கில் மரங்கள் அடர்த்தியாக வளர்ந்த பகுதியில் வந்ததும் மன்னரின் வண்டி நின்றுவிட்டது. சாரதி எவ்வளவோ முயன்றும் குதிரைகள் நகரவே இல்லை. அப்போது அடர்த்தியாக நின்ற மூங்கில் மரக்காட்டில் இருந்து ஒரு பெண்ணின் சிரிப்பொலி கேட்டது. திடுக்கிட்ட மன்னர்.  தனது சேவகர்களை உடனே அந்த மூங்கில்களை வெட்டி அகற்றுங்கள் என்று கட்டளையிட்டார். அப்போது அங்கிருந்து பெண் குரல் வந்தது. ‘‘மன்னா, நான்  குலசேகரநாதரின் மனைவி தனது பெயர் நித்ய கல்யாணி. அசைவ உணவை உண்ண ஆசைப்பட்டு வைராவி இனத்தார் வீடு சென்று உண்டு விட்டேன். அதற்கு  தண்டனையாக எனது கணவர் என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பினார். ...

அழைப்பவர்க்கு காவலாய் வருவார் அடுக்கு சுடலைமாடன்

Image
திருநெல்வேலி டவுனில் உள்ளது அடுக்கு சுடலைமாடன் கோயில். இக்கோயிலில் அய்யன் சுடலைமாடன் பீடம், 21 படிகள் கொண்டு அடுக்கடுக்காக பிரமிடு   போன்ற அமைப்புடன் உள்ளதால் அடுக்குச்சுடலை என்ற பெயருடன் பக்தர்கள் அழைத்து வருகின்றனர். அடுக்குச்சுடலை தன்னை வணங்கி வரும் அடியவர்கள்   அழைத்தால் காவலாய் வருகிறார். திருநெல்வேலி மேலநத்தம் அக்னீஸ்வரர் கோயிலில் சுமார் 7 தலைமுறைக்கு முன்பு தர்மகர்த்தாவாக இருந்த சாவடி   சுப்பிரமணியபிள்ளை, தான் கட்டிவரும் வீட்டுக்கு தச்சுவேலைக்காக உயர்தர மரங்களை வெட்டிவர இருபதுக்கும் மேற்பட்ட ஆட்களை அழைத்துக் கொண்டு  ஆரியங்காவு மலைக்கு சென்றார்.  மரத்தை வெட்டும் முன்பு முத்துசாமி ஆசாரி, ‘‘ஐயா, மாடன் முதலான 21 பந்தி தேவதைகளுக்கு பூஜை செய்து தடியங்கா பலி கொடுக்கவேண்டும்’’ என்று   கூறியதற்கு அதெல்லாம் ‘‘சுடலைமாடன் காவலுக்குட்பட்ட காக்காச்சிமலை, கண்ணாடிச் சோலை மலைகளில் வெட்டும் போதுதான் பலி கொடுக்கணும்.   இங்கெல்லாம் வேண்டாம். மரத்த வெட்டச்சொல்லுங்க ஆசாரி,’’ என்று உத்தரவிட, அதன்படி மரத்தை தொழிலாளர்கள் வெட்டிக்கொண்டு வந்தனர். வரும் வழியில் ப...

அடியவர்க்கு அருள்புரிவாள் அருணாலட்சுமி அம்மன்

Image
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள குருசாமிபுரத்தில் வீற்றிருக்கும் அருணா லட்சுமி அம்மன், தன்னை வணங்கும் அடியவர்க்கு அருள்புரிகிறாள்.  குருசாமிபுரத்தில் வாழ்ந்து வந்த சிவனிணைந்த பெருமாள், சண்முக வடிவம்மாள் தம்பதியினருக்கு குழந்தை இல்லை. ஜோதிடர் ஆலோசனைப்படி குலதெய்வக் கோயிலுக்குச் செல்ல முடிவு செய்தனர். அவர்கள் குலதெய்வம் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தேரிக்குடியிருப்பில் அருள் பாலிக்கும் கற்குவேல் அய்யனார். அங்கு சென்று வழிபட்டு வந்தனர். அதன் பயனாக சண்முக வடிவம்மாள் கருவுற்றாள். அவளுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அய்யனார் அருளால் பிறந்ததாலும், திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்ததாலும் சிவனிணைந்தபெருமாள் தனது மகளுக்கு ஆதிபரமேஸ்வரன் அருணாசலம் எனும் பெயரை வைக்க விரும்பி அருணா என்றும் மூத்தது பெண் குழந்தையானால் மகாலட்சுமி வந்து பிறந்ததாக எண்ணி, லட்சுமியையும் சேர்த்து அருணா லட்சுமி என பெயரிட்டார்.  தனது மகள் தெய்வமகள் என்றெண்ணி அன்போடும், பாசத்தோடும் செல்லமாக வளர்த்து வந்தார். அருணா லட்சுமியைத் தொடர்ந்து இரண்டு ஆண் குழந்தைகளும், அதனையடுத்து ஒரு பெண் குழந்தையும் பிற...

திக்கற்றவர்க்கும் துணையிருப்பாள் தெற்கு மேட்டாள்

Image
நெல்லை மாவட்டம் - ராதாபுரம் தாலுகாவிற்குட்பட்ட தனக்கர்குளத்தில் தெற்குமேட்டாள் கோயில் அமைந்துள்ளது. சுமார் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா பகுதியில் கடுமையான வறட்சி நிலவியது. தனக்கர்குளம் ஊரிலும் இதே நிலை இருந்ததால், அப் பகுதியைச் சேர்ந்த பெரிய அணஞ்சி கோனார் மிகவும் வருந்தினார். அவர் நூற்றுக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். தம்பி சின்ன அணஞ்சியின் ஆலோசனைப்படி, ஆடுகளை உறவினர் ஒருவரிடம் மேய்க்கச் சொல்லிவிட்டு, அண்ணன், தம்பி இருவரும் மேய்ச்சலுக்கான பசுமையான இடம் தேடி, மலையாள நாட்டுக்கு வருகிறார்கள். தென்திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த கன்னியாகுமரி மாவட்டம் கேசவன் புதூர், அழகிய பாண்டிபுரம் பகுதிகளைச் சுற்றி மேய்க்கலாம் என முடிவு செய்து, அங்கிருந்து புறப்பட்டு தனது ஊருக்கு வருகின்றனர். மறுநாள் அதிகாலைப் பொழுதில் ஆடுகளை ஓட்டிச் சென்றனர். இரண்டு நாள் நடைப் பயணத்திற்கு பின்னர் கேசவன் புதூர், சூட்சணை அருகேயுள்ள கோணத்தில் பட்டி அடித்து (ஆட்டு கிடை) அமைத்து ஆடுகளை அடைத்தனர். பகலில் அப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டு வந்தனர். தம்பி சின்னஅணஞ்சி...

உயர்வான வாழ்வு தருவார் ஒத்தப்பனை சுடலை

Image
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ளது சிறுமளஞ்சி. இவ்வூரில் அமைந்துள்ளது ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோயில். காவல் தெய்வங்களில் முதன்மையானவராக கருதப்படும் சுடலைமாடன் லிங்க வடிவில் சுயம்புவாக மூவாற்றங்கரையினிலே சீவலப்பேரியிலே தோன்றினார். அடைபட்ட சிமிழாய், அய்யன் திருக்கோட்டியப்பரால் அடையாளம் காட்டப்பட்டார் ஊர்க்காட்டில், தாமிரபரணியிலே வாடிய மலர்மாலையாய் வந்து சிறுவர்களிடத்தில் திருவிளையாடல் நிகழ்த்தி இரட்டை சுடலையாய் மேல கோயிலிலும், வேப்ப மரத்தின் அடியில் ஓங்கி உயர்ந்த புற்றாய் வேம்படிமாடனாய் கீழக் கோயிலிலும் ஆறுமுகமங்கலத்தில் எழுந்தருளினார்.  பக்தனுக்காக கோர்ட்டில் சாட்சியும் கூறி, ஐகோர்ட் மகாராசாவாக அழைக்கப்பட்டார். வாங்கிய மாடுகளுக்கு கொடுக்காத பணத்தை கொடுத்ததாக பொய் சத்தியம் செய்ததால், மாடுகளுடன் வந்து பொய் சத்தியம் செய்தவரை பழி தீர்த்து தான் யார் என்பதை காட்ட ஒத்தப்பனையில் காட்சி கொடுத்தார் விஜயநாராயணத்தில். ஓரினத்தானுக்குள் உருவான பகைக்காக பொய் சத்தியம் செய்ததால் ஒத்தப்பனை உயரத்திற்கு ஒளியாய் ஜொலித்தார் சிறுமளஞ்சியிலே. நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகாவில் ஏர்வாடி அ...

அருஞ்சுனை காத்த அய்யனார்

Image
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ளது மேலப்புதுக்குடி. இவ்வூரில் அமைந்துள்ளது அருஞ்சுனை காத்த அய்யனார் கோயில். சுமார் 700  ஆண்டுகளுக்கு முன்பு திருவைகுண்டத்தை தலைமையிடமாக கொண்டு சிங்கராஜன் என்ற மன்னன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அப்பகுதியில்  தடாகம்(நீர்நிலை) ஒன்று இருந்தது. அதிலுள்ள நீர் பன்னீர் போன்று தெளிந்தும், சுவை மிக்கதாகவும் இருந்தது. ஒரு முறை இந்த தடாகத்தில் இருந்து கனகமணி  என்ற கன்னிப்பெண் ஒருவர் குடத்தினில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வீடு திரும்பினாள். கானகத்தின் வழியே நடந்து சென்றபோது வழியில் கல்லால் கால் இடறி  விழுந்தாள். அவள் விழுந்ததால் குடத்து நீர் அவ்விடத்தில் தவம் செய்து கொண்டிருந்த முனிவரை நனைத்தது. தவநிலை கலைந்த முனிவர் கடும்சினம்  கொண்டார். கவனச்சிதறலால் கால் இடறி விழுந்த கன்னிகையே, ‘‘உன் கையால் எவர் நீர் வாங்கி அருந்தினாலும் அடுத்த கனமே அவர் மாண்டுபோவார். இதை நீ  வெளியே தெரிவித்தால் மறுகனமே மரணம் உன்னை தழுவும். இதையெல்லாம் விட நீ எவ்வகையில் இறந்தாலும் இறக்கும் தருவாயில் செய்யாத குற்றம்  சுமத்தப்பட்டு தண்டனைக்காக ம...

ஆயுள் பலம் தருவார் ஆலடி புதியவன்

Image
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு அருகிலுள்ள குரும்பூரில் வசித்து வந்தவர் வைரவன் நாடார். மனைவி, மக்களை அழைத்துக்கொண்டு, நெல்லை மேற்குப் பகுதிக்கு வந்து, ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூர் என்ற ஆலடிப்பட்டி கிராமத்தில் குடியேறினார். இந்தப் புலம் பெயர்தல் ஏழு தலைமுறைகளுக்கு  முந்தைய நிகழ்ச்சியாகும். தான் வணங்கி வந்த சாஸ்தாவுக்கும் அப்பகுதியில் சிறிய அளவில் கோயில் அமைத்து வழிபட்டு வந்தார். கூடவே குலதெய்வமான  சுடலைமாடனுக்கும் சிலை அமைத்து பூஜித்தார்.  அந்தப் பகுதியில், தனது மகன்களுக்கும் அவன் தரத்து வாலிபர்களுக்கும் பகை உருவானதால், வைரவன் நாடார் அங்கிருந்து திப்பணம்பட்டிக்கு வந்து  குடியமர்ந்தார். இங்கே அவர் விவசாயத் தொழிலை மேற்கொண்டார். மேலும் வீட்டில் கறவை மாடுகளும் வளர்த்து வந்தார். மகன் மூத்தவன் மாடு, கன்றுகளை  ஓட்டிக்கொண்டு, தன் நண்பர்களோடு மேய்ச்சலுக்கு சென்றான். காட்டில் அவரவர் மாடுகள் மேய்ந்து கொண்டிருக்க, சிறுவர்கள் ஆடிப்பாடி விளையாடுவதும்,  குளத்தில் நீராடுவதுமாகப் பொழுதை கழிப்பது வழக்கம். ஒருநாள் காலைப்பொழுதில் மாடுகள் கட்டப்பட்டிருந்த இடத்...

நிம்மதியான வாழ்வு தருவாள் நீலகேசி அம்மன்

Image
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அடுத்துள்ள இட்டகவேலியில் நீலகேசி அம்மன் கோயில் அமைந்துள்ளது. பன்னிரண்டு வயது நிரம்பிய தேவி தனது   தாயுடன் இட்டகவேலியில் உள்ள தாய்வழி பாட்டியான நீலம்மை வீட்டில் வசித்து வந்தார். பாட்டியும், அம்மாவும் தந்தை இல்லா குறை தெரியாமல் பாசம் காட்டி   வளர்த்து வந்தனர். தாய்மாமன் அன்பு காட்டுவதில் குறைவில்லை என்றாலும் மனைவி முகம் சுழிக்காமல் நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் சில   நேரங்களில் கண்டிப்புடன் நடந்து கொள்வார். ஒரு நாள் வீட்டு முன்பு தோழிகளோடு விளையாடிக்கொண்டிருந்த தேவியை அழைத்து, வயல்வெளிகள் நிறைந்த   பகுதியின் மறுகரையில் வசிக்கும் வேறு இனத்தவர்கள் வீட்டில் தேங்காய் சிரட்டையில் தீ கங்கு வாங்கி வருமாறு மாமன் மனைவி அனுப்புகிறாள்.  அதன்படி தேவி தீ கங்கை சிரட்டை (கொட்டாங்குச்சி)யில் வாங்கி வருகிறாள். அப்போது வீசிய காற்றால் கங்கு அனலாகி சிரட்டையில் கண் பகுதி தீ வெப்பத்தால்   கருகி, சிரட்டையை பிடித்திருந்த கையில் பட்டுவிடுகிறது. தீ சுட்ட வேகத்தில் வரும் வழியிலேயே சிரட்டையை தூக்கி எறிந்து விடுகிறாள். பின்னர் கையில் தீ ...

வெற்றியை அருள்வாள் வீரபாண்டி அம்மன்

Image
நெல்லை மாவட்டம், தென்காசி அருகேயுள்ள குடியிருப்பு கிராமத்தில் கோயில் கொண்டுள்ள வீரபாண்டி அம்மன் தன்னை வேண்டி வழிபடும் பக்தர்களுக்கு வெற்றியை தேடித் தருகிறாள். கி.பி.1760ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் நிலவள கலெக்டராக விரதல்துரை இருந்தார். இவர் வாரம் ஒரு முறையாவது குற்றால நீர்வீழ்ச்சியில் நீராடுவது வழக்கம். அந்தக் காலகட்டத்தில் தென் காசியிலிருந்து குற்றாலத்திற்கு சாலைவசதி இல்லை. ஒற்றையடிப் பாதைதான் இருந்தது. இதனால் தென்காசிக்கும், குற்றாலத்திற்கும் இடையே சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டார். ஒருநாள் சாலைப்பணியை மேற்பார்வையிட குதிரையில் தென்காசிக்கு வந்தார். அடர்ந்த வனப்பகுதியில் மரச்சோலையில் இருந்த மரம் ஒன்றில் தனது குதிரையை கட்டிப்போட்டார். பணிகளை பார்வையிட்ட பின்னர் புறப்படுவதற்காக குதிரையை அவிழ்க்கச் சென்றார். அங்கே குதிரை இறந்து கிடந்தது. அதைக்கண்டு விரதல்துரை மிகவும் வருந்தினார். அவரை தேற்றி ஆறுதல் கூறிய அவரது காரியதரிசி அருணாசலம்பிள்ளை, ஏதேனும் விஷப்பூச்சி கடித்து குதிரை இறந்திருக்குமா என சுற்றும் முற்றும் ஆய்வு செய்து பார்த்தார். அப்படி எதுவுமே இல்லை என்பது தெளிவானது. அ...

நம்பியவர்களுக்கு நல்லருள் தருவார் நல்லதம்பி சாஸ்தா

Image
நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரத்தில் வீற்றிருக்கும் நல்லதம்பி சாஸ்தா, நம்பியவர்களுக்கு நல்லருள் தந்து காத்தருள்கிறார். ராஜவல்லிபுரத்தில் வசித்து வந்த பட்டர் ஒருவர் தான் பூஜை செய்யும் கோயில் மூலவருக்கு அபிஷேகம் செய்ய செப்பறையில், ஓடும் தாமிரபரணி ஆற்றில் வந்து தண்ணீர் எடுத்து செல்வார். ஒருநாள் பட்டர் தண்ணீர் எடுத்துவிட்டு அந்தச் செம்பு குடத்தை கரையில் வைத்து விட்டு, மீண்டும் ஆற்றுக்கு சென்று விட்டு வரும்போது, குடத்தை யாரோ தட்டி விட்டுள்ளனர். குடத்திலிருந்த நீரெல்லாம் தரையில் கொட்டியது. பின்னர் தண்ணீர் எடுத்த உடனே எங்கும் குடத்தை வைக்காமல் கொண்டு சென்றார். இப்படி தினமும் தொடரவே, மூன்று தினங்களுக்கு பின்னர் பட்டர் பிரச்னம் பார்த்தார்.  அப்போது இது தர்ம சாஸ்தாவின் திருவிளையாடல் என்பது தெரிந்தது. அன்றிரவு பட்டர் கனவில் தோன்றிய சாஸ்தா, தாமிபரணி ஆற்றில் செப்பறை நடராஜர் கோயிலுக்கு வலது புறம் தனக்கு கோயில் கட்ட வேண்டும் என்றும், அதற்குத் தேவையான உதவிகளை கிராமகர்ணம் செய்வார் என்றும் கூறினார். அன்றிரவு கிராம கர்ணம் கனவில் தோன்றிய சாஸ்தா, நாளை பட்டர் வருவார் என்றும் தனக்கு கோயில் கட்டும்...

தர்மம் தழைக்க வைப்பார் தரும ராஜா

Image
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ளது பெரும்பனை. இவ்வூரில் அமைந்துள்ளது தருமராஜா கோயில். இது பஞ்ச பாண்டவர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியிலிருந்து கருப்பையா நாடார் குடும்பம் பிழைப்பு தேடி பெரும்பனை ஊருக்கு வந்துள்ளனர். பெரும்பனை முன்னொரு காலத்தில் செழிப்புடன் திகழ்ந்ததால் இந்த ஊர் பெரும்பண்ணை என்றே அழைக்கப்பட்டதாகவும் அது மருவி பெரும்பனை என்று அழைக்கப்படலாயிற்று என்றும் கூறுகின்றனர். ஈத்தாமொழி கருப்பையாவின் குல தெய்வம் பொன்னார மாடனும், சாஸ்தாவும் ஆகும். கருப்பையா நாடார் தனது குடும்பத்துடன் ஊருவிட்டு வரும்போது அவரது குலதெய்வமும் அவர்களுடன் வந்துவிட்டது. இதையடுத்து தனது குலதெய்வங்களுக்கு பிடிமண் கொண்டு வந்து பெரும்பனையில் கோயில் அமைத்துள்ளார். ஊரிலிருந்து வரும்போது தருமர் உள்ளிட்ட பஞ்ச பாண்டவர்களுடன் திரௌபதியும் சேர்ந்திருக்க கூடிய வரைபடம் ஒன்றினை கொண்டு வந்து வீட்டுச் சுவரில் மாட்டி வைத்துள்ளார். வயது முதிர்ந்த நிலையில் ஒருநாள் பகலில் கருப்பையா நாடார் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும்போது அவரது கனவில் தோன்றிய தருமர், என்னை நம்பிய உனக்கு...

உயர்வான வாழ்வருள்வாள் உத்தமி அம்மன்

Image
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ளது நெடுவயல். இவ்வூரில் அமைந்துள்ளது உத்தமி அம்மன் கோயில். தென்காசியிலிருந்து தெற்கே 10 கி.மீ தொலைவில் உள்ளது அச்சன்புதூர் கிராமம். இங்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்த அக்கா தங்கை இருவரும் அடுத்த, அடுத்த ஊர்களில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டனர். இதில் அக்காவிற்கு குழந்தை இ்ல்லை. தங்கைக்கு ஆறு குழந்தைகள். தங்கையின் குழந்தைகள் மேல் அதிகம் பாசம் வைத்திருந்த அக்கா, வாரம் தவறாமல் செவ்வாய் கிழமை தோறும் தங்கை வீட்டுக்கு வகை, வகையாய் பலகாரம் செய்து கொண்டு சென்று குழந்தைகளுக்கு ஊட்டிவிட்டு மகிழ்ச்சியோடு தன் வீட்டிற்கு வருவாள்.  இது சில மாதங்கள் தொடர தங்கையின் வீட்டு அருகே வசித்து வந்த மூதாட்டி ஒருவர் ‘‘புள்ள இல்லாத உங்க அக்கா மலடி வந்து உம்புள்ளங்கள கொஞ்சுறதும், ஊட்டுறதும் உனக்கு வேணுமுன்னா நல்லா இருக்கலாம். ஆனா குழந்தைங்களுக்கு கண்ணு விழுந்திரும். அதனாலதான் என்ன ஊட்டம் கொடுத்தாலும் உன் புள்ளங்க சத்து புடிக்காம இருக்குதுங்க’’ என்று கூற, மனம் மாறினாள் தங்கை.அந்த வாரம் செவ்வாய் கிழமை வந்தது. அக்கா வரும் நேரமாயிற்றே என்று எண்...

செழுமையான வாழ்வு தரும் செங்கிடாக்காரன்

Image
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே உள்ளது பொடியன்விளை. இவ்வூரில் அமைந்துள்ள பூ உளங்கொண்டாள் கோயிலில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார் செங்கிடாக்காரன். கயிலாய மலையில் சிவபெருமான், உமாதேவியிடம் மறை பொருள்களை உணர்த்திக் கொண்டிருந்தார். அப்போது தந்தையும், தாயும் என்ன ரகசியம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என எண்ணிக்கொண்டு அதை கவனிக்க முருகபெருமான் வண்டு ரூபம் கொண்டு தாயாரின் கூந்தலுக்குள் ஒளிந்திருந்தார். அகிலத்தையே காத்தருளும் அகிலாண்டேஸ்வரியான உமாதேவி இதை தெரிந்து கொண்டாா். இருப்பினும் மகனின் விளையாட்டை ரசித்தாரே தவிர தடுக்கவில்லை. இதை ஞானத்தால் உணர்ந்த சிவபெருமான், மலைமகளே! என்ன இது, ‘‘வேலவா, பெற்றவர்களை மதியாமல் சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொண்டதால் நீ கடலில் மீனாக போக கடவது.  மகன் மழலை குணத்தில் தவறு இழைத்தபோதும் அதை தடுக்காமல் ரசித்த மலைமகளே நீ அதி அரசனுக்கு மகளாக மானிடப்பிறவி எடுக்கக்கடவது என்று சபித்தார். உடனே உமா தேவி ‘‘எங்களுக்கு சாப விமோசனம் கிடைப்பது எப்போது என கேட்க, அதற்கு சிவபெருமான் நீ பருவ வயது நிரம்பும் போது, நான் வந்து உன்னை மணம் புரிவேன். அப்போது மகர மீனா...

பிரச்னைகளை தீர்த்து வைப்பார் பெரும்படை சாஸ்தா

Image
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா சுப்பிரமணியபுரம் அருகே உள்ள சிறிய கிராமம் இருவப்பபுரம்.  இங்கு கோயில் கொண்டுள்ள பெரும்படை சாஸ்தா, தன்னை வணங்கும் பக்தர்களுக்கு பிரச்னைகளை தீர்த்து வைத்து பெருவாழ்வு அளிக்கிறார். சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு செல்வ செழிப்பாக திகழ்ந்த இருவப்பவூர் காலரா எனும் நோய் பரவியதன் காரணமாக இவ்வூரில் வாழ வந்தவர்கள் ஊரை விட்டு வெளியேறி வேறு வேறு பகுதிகளில் குடியேறினர். சிலர் நோயின் தாக்கத்தால் மாண்டனர். ஆண்டுகள் சில உருண்டோட சுற்றுவட்டார கிராமங்களில் மக்கள் மிகுதியாக வாழ, இக்கிராமம் புல், புதர்கள் வளர்ந்து காடாக இருந்தது.  இந்த கிராமத்தின் அருகேயுள்ள கிராமத்தில் வசித்து வந்த இடைக்குல பெண் ஒருவர் பால் கொண்டு வந்து பக்கத்து கிராமங்களில் விற்பனை செய்து வந்தார். ஒருநாள் அந்த பெண் பால் கொண்டு வரும்போது மரத்தின் வேர் ஒன்று இடற, அந்த மரத்தின் வேர் பகுதியில் அந்த பெண் கொண்டு வந்த பால் முழுவதும் கொட்டியது. இதே சம்பவம் மூன்று நாட்கள் தொடர்ந்திட, செய்வது அறியாது திகைத்த அந்த பெண், தனது கணவனிடத்தில் கூறினாள். மனைவியின் கால் இடற காரணமான மரத்தின் வேரை...

வெள்ளம் காத்த உடைப்புவாய் கருப்பண்ணசுவாமி

Image
திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள தா. பேட்டை வடமலைப்பட்டி கிராமத்தின் ஏரிக்கரையில் உடைப்புவாய் கருப்பண்ணசுவாமி கோயில் அமைந்துள்ளது. சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு சேலத்திலிருந்து வணிகர்கள் ஆறு பேர், திருச்சியை சுற்றியுள்ள கிராமங்களில் வியாபாரம் செய்வதற்காக வருகிறார்கள்.  வியாபார பொருட்களை ஒரு புறமும், தங்களுக்குத் தேவையான உணவு, உடைகள் உள்ளிட்ட பொருட்களை மற்றொரு புறமும் மூட்டைகளாகக் கட்டி அதனை  பொதி மாட்டின் மீது இருபுறமும் தொங்கும்படி ஏற்றி வருகின்றனர். சேலம் எல்லையை கடந்து வருகையில் ஆலமர நிழலை கண்டனர். அந்த நிழலில்  இளைப்பாறியவர்கள் காலை உணவை உண்டனர். பின்னர், பயணத்தை தொடர்ந்தனர். அப்போது ஒரு மாட்டின் பொதிக்கான பாரம் இருபுறமும் சம எடையில்  இல்லாததால் நடந்து செல்ல பொதிமாடு சிரமம் அடைந்தது.  வணிகர் ஒருவர் பாரத்தை சமன் செய்ய ஆலமரத்தின் கீழேயிருந்த நடுகல் ஒன்றை எடுத்து உணவு பொருட்களை வைத்திருந்த பக்கம் வைத்து கட்டினர். பாரம்  சமன் ஆனது. அவர்களின் பயணம் தொடர்ந்தது.அந்தக் கல்லை அப்பகுதி மக்கள் கருப்பண்ணசாமியாக வழிபட்டு வந்திருந்தனர். சில தினங்களு...

கவலைகளை நீக்குவாள் கருங்காளி

Image
நெல்லை மாவட்டம் களக்காடு அருகேயுள்ள பத்தமடையில் அருள்பாலிக்கும் கருங்காளி, தன்னை வணங்கும் அடியவர்களுக்கு கவலைகளை நீக்கி, மகிழ்ச்சியான வாழ்வை தருகிறாள். தாரகாசுரன் என்ற அரக்கன் சிவனை நோக்கி கடுமையான தவமிருந்தான். அவனது தவத்திற்கு இரங்கிய சிவபெருமான், அவன் முன்பாகத் தோன்றினார். என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார். தனக்கு எந்த நிலையிலும் மரணம் நேரக்கூடாது என்றான். பிறக்கும் எல்லா உயிருக்கும் இறப்பு உண்டு என்றார், அவர். அப்படியானால், மணமுடிக்காத இளம் மங்கை, அகோர முகத்தோடு, ஆடை அணிகலனின்றி என்னோடு யுத்தம் செய்து என்னை வீழ்த்த வேண்டும். என்று கேட்டான் தாரகாசுரன். எந்த பெண் ஆடைகளின்றி ஆண்கள் முன் வருவாள்.  அப்படி இருக்கையில் யுத்தமா, நினைத்துப் பார்க்கவே முடியாது. எனவே இப்பிறப்பில் தனக்கு மரணமே நேராது என்று மனதிற்குள் நினைத்து மகிழ்ச்சி அடைந்தான். சிவபெருமானும் அவன் விருப்பப்படியே வரத்தைக் கொடுத்தார். வரம் பெற்ற தாரகாசுரன். தேவர்கள் உட்பட ஏனைய உயிர்களுக்கு எண்ணிலடங்கா துன்பத்தை விளைவித்தான். அவனது ஆட்டம் நாளுக்கு நாள் அதிகமானது. அவனைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபெருமானிடம் சென்று மு...